Home /News /tamil-nadu /

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
    வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் திருப்புண்டியில் 6 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலத்தில் தலா மூன்று சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி