நாளை முதல் தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ! ஊழியர்களின் நிலை என்ன?

250 நிரந்தர பணியாளர்களின் வேலை என்னாகும் என பணியாளர்கள் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

news18
Updated: August 31, 2019, 8:35 PM IST
நாளை முதல் தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ! ஊழியர்களின் நிலை என்ன?
கோப்புப்படம்
news18
Updated: August 31, 2019, 8:35 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அனைத்து பணிகளும் நாளை முதல் முழுமையாக தனியார்மயமாகும் என்று மெட்ரோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ நிர்வாகம் பெரும்பாலான பணிகளில் தனியார் ஊழியர்கள் இருந்துவருகின்றனர். இருப்பினும், மெட்ரோ ரயில் நிர்வாக கட்டுப்பாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், ரயில் இயக்குபவர், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிலைய கட்டுப்பாட்டு பணியாளர்கள், பராமரிப்பு பணியாளர்கள், டிக்கெட் வழங்குபவர் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நாளை முதல் முழுமையாக தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதனால், 250 நிரந்தர பணியாளர்களின் வேலை என்னாகும் என பணியாளர்கள் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.  மொத்தமுள்ள 250 பணியாளர்களின், 150 பேர் நிலைய கட்டுப்பாட்டு பணியிலும், 100 பேர் தொழில்நுட்ப பணியாளர்களாகவும் உள்ள நிலையில், அவர்கள் அனைவரின் பணிகளிலும் படிப்படியாக புகுத்தப்பட்ட தனியார் மயம் நாளை முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.

பராமரிப்பு பணிகளில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக பலமுறை பல்வேறு விதமான பிரச்சனைகளை மெட்ரோ நிர்வாகம் எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also see:

Loading...

First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...