• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவு..

மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவு..

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் மாற்றம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் மாற்றம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் என அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



    சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் என்றும், சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில்நிலையத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்துநிலைய மெட்ரோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: