சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில்
  • News18
  • Last Updated: September 9, 2020, 6:32 PM IST
  • Share this:
ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கைப்படி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ரயில் சேவை நேரத்தை மேலும் நீட்டிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் சேவை மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுவதாகவும் நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.



Also read... நாகப்பட்டினத்தில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு மத்திய அரசு அனுமதி


பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் பயணிக்க வேண்டுமென மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading