CHENNAI METRO RAIL TICKET PRICE IS REDUCED FROM TODAY SRS
குறைக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது! கட்டணங்களின் முழு விவரம்
சென்னை மெட்ரோ
பயணிகளிடம் அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை பரீசிலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது.
சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு முன்பாக 1 லட்சத்து 13 ஆயிரம் வரை அதிக பட்சமாக பயணிகள் தினசரி பயணித்து வந்தனர். நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
நிலையான வாழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ ரெயில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் பயணிகளிடம் அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை பரீசிலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது.
அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூபாய் 70 கட்டணம் ரூபாய் 50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது. பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவீதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன்படி குறைக்கப்பட்ட கட்டண விபரம்
விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை 10 ரூபாயும் நங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் வரை ரூபாய் 20-ம் , கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம் மற்றும் தேனாம்பேட்டை வரை ரூபாய் 30-ம் ஏஜி-டிம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம் மற்றும் மண்ணடி வரை ரூபாய் 40-ம், தியாகராயா கல்லூரி, தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, டோல்கேட், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரை ரூபாய் 50-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து ஈக்காட்டு தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம் வரை ரூபாய் 30-ம், சிஎம்பிடி பேருந்து நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, நேரு பூங்கா, எழும்பூர் வரை ரூபாய் 40 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.