• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாதனை பயணத்தை நோக்கி திருநங்கைகள்! சென்னை மெட்ரோ ரயில் நிலையப் பணிகளில் 15 திருநங்கைகள் பணியமர்த்தம்

சாதனை பயணத்தை நோக்கி திருநங்கைகள்! சென்னை மெட்ரோ ரயில் நிலையப் பணிகளில் 15 திருநங்கைகள் பணியமர்த்தம்

எல்லா துறைகளிலும் சாதித்து வரும் திருநங்கைகள் தற்போது சென்னை மெட்ரோ ரயில் பணியிலும் கால் பதித்துள்ளனர்.

  • Share this:
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளில் திரு நம்பிகள் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 15 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த செயல் பல்வேறு தரப்பினராலும்,   பாராட்டப்பட்டு வருகிறது.சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து தொடங்கி வைத்தார்.

இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகம், பயணிகள் பரிசோதனை, ஒழுங்கமைப்பு ஆகிய பணிகளில் சுமார் 15 திருநங்கைகளுக்கு CMRL வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
குறிப்பாக இவர்கள் அனைவரையும் புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணி வழங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது சென்னை மெட்ரோ.

இதனால், “சமூகத்தில் பெரும் அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை என்ற மனக்குறையுடன் வாழ்ந்து வந்த எங்களுக்கு இதன் மூலம் வாழ்வாதாரம் முன்னேறும்” என்று திருநங்கைகள் தெரிவிக்கின்றனர்.திருநங்கைகள் மட்டுமின்றி திரு நம்பிகளும் பணியில் சேர்ந்து  உள்ளனர். அம்மா, அப்பா என அனைத்து உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட என்னை மெட்ரோ நிர்வாகம் பணி வழங்கி இருப்பது பெருமையாக உள்ளது என கூறுகிறார் அருண் கார்த்திக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: