Home /News /tamil-nadu /

சென்னையில் ஜனவரி முதல் ‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் துவக்கம்! - மொபிலிட்டி கார்டின் பயன்கள் என்ன?

சென்னையில் ஜனவரி முதல் ‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் துவக்கம்! - மொபிலிட்டி கார்டின் பயன்கள் என்ன?

NCMC CARD

NCMC CARD

இந்த NCMC கார்டின் மூலம் மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள் போன்ற அனைத்துவித போக்குவரத்துகளிலும் பயணம் மேற்கொள்ள பயன்படுத்த முடியும், இவை தவிர்த்து ஷாப்பிங் செய்வதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்கவும் ...
வங்கி பணப் பரிமாற்றம், ஷாப்பிங், பயண டிக்கெட் உட்பட பல விதமான சேவைகளை ஒரே கார்டில் பெறும் வகையில் மொபிலிட்டி கார்டு எனப்படும் ஒரு தேசம் ஒரு அட்டை திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது.

நேஷனல் காமன் மொபிலிட்டி கார்ட் சுருக்கமாக NCMC, ஒரு தேசம் ஒரு கார்டு என்ற அடைமொழியுடன் கடந்த 2019ம் ஆண்டு மார்ச்சில் மத்திய நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

இனி ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கார்டை பயன்படுத்தத் தேவையில்லை, இந்த மொபிலிட்டி கார்டை வைத்திருந்தால் போதும். பணப் பரிவர்த்தனைகளையும் செய்யலாம், பயணம் செய்வது, ஷாப்பிங் போன்றவற்றிற்காகவும் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபிலிட்டி கார்டை, 2022 ஜனவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Also read: ஆட்டோ ஓட்டுநரை பழிவாங்க 22 கிமீ பயணம் செய்து வந்த குரங்கு – ஒரு திகில் அனுபவம்!

இந்த கார்டின் மூலம் மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள் போன்ற அனைத்துவித போக்குவரத்துகளிலும் பயணம் மேற்கொள்ள பயன்படுத்த முடியும், இவை தவிர்த்து ஷாப்பிங் செய்வதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியும்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி இது குறித்து கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கார்டு குறித்து விளக்கியுள்ளோம், இந்த புதிய சிஸ்டத்தை புத்தாண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.

Also read:   500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய Freshworks நிறுவனம் – ரஜினிக்கு நன்றி சொல்லும் சாதனை தமிழர் கிரிஷ் மாத்ருபூதம்!

ஏற்கனவே இருக்கக்கூடிய மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் மூலம் ரயில் பயணம் செய்யலாம், மற்றும் ரயில் நியைய வாகன நிறுத்தங்களில் ப்ப் பயன்படுத்தலாம். ஆனால் மொபிலிட்டி கார்டுகள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதால் பல்வேறு வழிகளில் இந்த கார்டை பயன்படுத்த முடியும், இனி வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி கார்டுகள் என்றில்லாமல் ஒரு கார்டு போதும் என்ற நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Chennai metro, One country one card

அடுத்த செய்தி