கோவை, நீலகிரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தேனி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

  மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தமான், தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: