தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 14, 2019, 4:30 PM IST
தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Web Desk | news18
Updated: June 14, 2019, 4:30 PM IST
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி,கோவை,தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும்  வெப்பத்தின் தாக்கம் வட மற்றும் உள் தமிழக மாவட்டங்களான திருவள்ளுவர்,சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் 7செ.மீ மழையும், திண்டிவனத்தில் 5செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும் திருவண்ணாமலை,வேலூரில் 4செ.மீ மழையும், கடலூர் நெய்வேலி மற்றும் ஏற்காடு பகுதிகளில் 3செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மழை


சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

also see...தண்ணீர் தட்டுப்பாட்டால் முடங்கிய கட்டுமானப் பணிகள்
Loading...





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...