• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என்றும், இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் - புதுவை கடற்கரையோர பகுதியில் நிலைக்கொள்ளக் கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என்றும், இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவித்த பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 சென்டி மீட்டர் மழை பதிவானதாக கூறினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: