ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

நவம்பர் 4ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு, கேரளா, தெற்கு ஆந்திராவில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறினார்.

    Also Read : ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி..  உயிர் பிரியும் நேரத்தில் பயணிகளை காத்த ஓட்டுனர்

    நவம்பர் 4ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Rain, Rain Update, Weather News in Tamil