முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 21ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல்லில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகரில் நாளை கனமழை பெய்யும். சிவகங்கை, தூத்துக்குடியிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Also read... அதிமுகவில் பழைய நிலையே நீடிக்கும்.. ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை, கலசப்பாக்கத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rain updates