தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

சென்னை காட்டுபள்ளி,  புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

news18
Updated: August 6, 2019, 9:23 PM IST
தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!
கோப்புப் படம்
news18
Updated: August 6, 2019, 9:23 PM IST
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய வானிலையாளர் விஜயன், வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை சார்ந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 சென்டிமீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால்,

Loading...

சென்னை காட்டுபள்ளி,  புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...