தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  காணப்படும்.   அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..
கோப்பு படம்
  • News18
  • Last Updated: September 22, 2020, 2:14 PM IST
  • Share this:
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன மழையும், வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன மழையும்,
தென் தமிழகம்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


காற்றின்  திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழகம்,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.‌

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  காணப்படும்.   அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)அவலாஞ்சி, பந்தலூர்  (நீலகிரி) தலா 11, சின்னக்கல்லார்  (கோவை), மைலாடி   (கன்னியாகுமரி), ஹாரிசன்  எஸ்டேட்  (நீலகிரி) தலா 9, வால்பாறை (கோவை) 8, பெரியாறு   (தேனி), சோலையாறு தலா 7, வால்பாறை  பரம்பிக்குளம்  (கோவை) மேல் பவானி (நீலகிரி) தலா 6,  நாகர்கோயில், தக்கலை, கொட்டாரம்  (கன்னியாகுமரி) தலா 5, குழித்துறை, இரணியல், கன்னிமார், சூரலாக்கோடு, பெருஞ்சாணி, சித்தாறு (கன்னியாகுமரி)  தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.‌Also read... கொரோனா நோய் தடுப்பு விதிமீறல்கள்: சென்னையில் 2 கோடி ரூபாய் அபராதம் வசூல்..



மீனவர்களுக்கான எச்சரிக்கை: செப்டம்பர் 22 - கேரளா, கர்நாடக   கடலோரப்  பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55   கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும் . செப்டம்பர் 22 மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் , குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று  40-50   கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும் .

செப்டம்பர் 23 - மகாராஷ்டிரா , கோவா கடலோரப்  பகுதிகளில் பலத்த காற்று 45-55   கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும் .
செப்டம்பர் 22,23 - தென்மேற்கு   அரபிக்கடல்  பகுதிகளில்    பலத்த காற்று 45-55 கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:  தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 23.09.2020  இரவு 11:30  மணி வரை  கடல் உயர் 3.3 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading