Home /News /tamil-nadu /

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பான அளவை விட 3-ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பான அளவை விட 3-ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும்,

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Indian Meteorological Center

    அடுத்த செய்தி