தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

மழை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் வடக்கு ஒடிசா மற்றும் வங்காளதேசம் இடையே நாளை கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  இந்த புயல் காரணமாக நாளை வரையில் தமிழகம், ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்று ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

  யாஸ் புயலால் தமிழகத்தில் பெரிய அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றபோதிலும், தரைக்காற்று தமிழகத்தில் வீசுவதால் வெப்ப சலனம் காரணமாக, சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  Read more : முழு ஊரடங்கிலும் ரேசன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி

   

  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  Must Read : ‘கோவின்’ இணையதளத்தில் புதிய வசதி : தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து கொள்ளலாம்

   

  அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: