வட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மழை

வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும், தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, ஜூன் 01 ஆம் தேதி செவ்வாய் கிழமை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .

    ஜூன் 02 ஆம் தேதி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .

    ஜூன் 03 மற்றம், 04 ஆகிய தேதிகளில், வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    ஜூன் 05 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வெப்பநிலை முன்னறிவிப்பாக, அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

    Read More : 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு பகல் பொழுதில் வானம் தெளிவாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, ஜூன் 01 முதல் 03 ஆம் தேதி வரை, குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    Must Read : ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க... உங்கள் கையில்தான் இருக்கு மக்களே : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    ஜூன் 01 முதல் 03 வரை, கேரள கடலோர பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்; ஜூன் 01 முதல் 05 வரை, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் படுகிறார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: