தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்-30) இங்கெல்லாம் மழை பெய்யும் : வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

மழை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

  • Share this:
    தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள் உள்பட மழை பெய்ய வாய்ப்பிருக்கும் பகுதிகள் குறித்த விவரத்தை சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 30ஆம் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள். தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    மாதத்தின் கடைசி நாளாக நாளை (ஆகஸ்ட் 31) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 1ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    செப்டம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்), சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை), தலா 4, குழித்துறை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 3, தேக்கடி (தேனி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பந்தலூர் (நீலகிரி) தலா 2, சென்னை விமான நிலையம், பெரியாறு (தேனி), ராதாபுரம் (திருநெல்வேலி, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), தொழுதூர் (கடலூர்) 1.

    Must Read : வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    அரபிக்கடல் பகுதிகளில், 30.08.2021(இன்று) கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆகஸ்ட் 30, 31 ஆகிய இரண்டு நட்களிலும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: