தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்புநிலையை விட அதிகமாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தமிழகத்தின் வானிலை நிலவரம் பற்றி செய்தி குறிப்பினை வெளியில்ட்டுள்ளார். அதில், அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பாக 06.04.2021 - இன்று, திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும்.
ஏனைய உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டி இருக்கும்.
குமரிக்கடல் பகுதியில் ( 1 கிலோமீட்டர் உயரம் வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக
06-04-2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
Also read... Tamil Nadu Assembly Election 2021: வாக்குச்சாவடியில் தூய்மை பணியாளர் திடீரென மயக்கம் - பரபரப்பு!
07.04.201 மற்றும் 08.04.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 09.04.201 மற்றும் 10.04.2021: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
நெடுங்கல் (கிருஷ்ணகிரி ) 2, பரமத்திவேலூர் ( நாமக்கல் ), கிருஷ்ணகிரி ( கிருஷ்ணகிரி ), ஆயக்குடி ( தென்காசி ) தலா 1
மீனவர்களுக்கான எச்சரிக்கை : எதுவுமில்லை.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.