அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை
- News18
- Last Updated: January 11, 2021, 3:55 PM IST
ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 13-ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also read... மாணவனின் குரலுக்கு செவிசாய்த்த ஒடிசா அரசு - பேருந்து நேரத்தை உடனடியாக மாற்றிய அதிகாரிகள்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு, 2 நாட்களுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.