தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..
கோப்புப் படம்
  • Share this:
வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, மைலாப்பூர் ஆகிய பகுதிகளில் கனமழை பதிவானது.

Also read... Happy Update: சென்னையில், 50,000-ஐக் கடந்தது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை..

அதிகபட்சமாக மீனம்பாக்கம் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. காலை நேரத்தில் லேசான தூறல் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிகிறது.

பலத்த காற்றால் தியாகராயர் நகரில் மரத்தின் கிளைகள் முறிந்து சாலையோரத்தில் உள்ள கடைகள் மேல் விழுந்தது. இதற்கிடையே, சென்னையில் இன்றும் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‌ ‌
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading