முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி,கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை க்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also read... EIA 2020 வரைவை 22 மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு மறுப்பு - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

மேலும், கடந்த ஆறு வருடங்களில் தமிழகத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு 47 விழுக்காடு அதிகமாக  பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயர் மற்றும் திருப்பூண்டியில் 10 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், சேலம் மாவட்டம் ஆத்தூர், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 8 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 7 செ.மீ மழையும், காரைக்கால், தர்மபுரி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

சூறாவளி மற்றும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த இரு தினங்களுக்கு குமரிக்கடல், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கும் அடுத்த 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடாப் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

First published:

Tags: Rain Update, Weather Forecast