ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தை விட்டு முழுவதுமாக விலகியது - வானிலை மையம் தகவல்!

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தை விட்டு முழுவதுமாக விலகியது - வானிலை மையம் தகவல்!

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

மொத்தமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 137.9 மிமீ மழை பெய்தது. வழக்கமாக 13 மிமீ மழை மட்டுமே பெய்யும். இது இயல்பை விட 961% அதிகமாகும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தமிழகத்தை விட்டு முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரெவி என்ற இரண்டு புயல்களை இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு நல்ல மழையைக் கொடுத்தது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் மட்டும் 477 மிமீ மழை பெய்தது. இந்த காலத்தில் இயல்பான மழைப்பொழிவு 449.7 மிமீ ஆகும். இது இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாகும். வழக்கமாக ஜனவரி மாத இறுதியுடன் முடிவடையும் ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் வடகிழக்கு பருவ மழை நீடித்தது .

குறிப்பாக 1-ம் தேதியில் இருந்து கடந்த 18-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதலாகவே மழை பதிவாகி இருந்தது. சென்னையில் இயல்பு மழை 19.8 மில்லி மீட்டர், ஆனால் பெய்தது 194.4 மில்லி மீட்டராகும். அதேபோல் காஞ்சீபுரத்தில் இயல்பு மழை 11.7, பெய்தது 100.7. செங்கல்பட்டு இயல்பு 14.2, பெய்தது 164.3., திருவள்ளூர் இயல்பு 15.7, பெய்தது 127.5. மதுரை இயல்பு 9.4, ஆனால் பெய்தது 131.2, திருச்சி இயல்பு 10, பெய்தது 137.1. கோவை இயல்பு 7.6, பெய்தது 96.9. நெல்லை இயல்பு 31.4, பெய்தது 374.3

மொத்தமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 137.9 மிமீ மழை பெய்தது. வழக்கமாக 13 மிமீ மழை மட்டுமே பெய்யும். இது இயல்பை விட 961% அதிகமாகும்.

இந்த நிலையில் இன்றுடன் வடகிழக்குப் பருவமழை தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா ஆந்திரா தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

20-01-2021 மற்றும் 21.01.2021 தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

Also read... பெரம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tamil Nadu Weather, Weather Forecast