Home /News /tamil-nadu /

வட மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - வானிலை மையம்

வட மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - வானிலை மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Weather: சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

  • News18
  • Last Updated :
    உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    27.01.2022, வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

    28.01.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

    29.01.2022, 30.01.2022: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

    31.01.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

    Also read... குடியரசு தலைவராக உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதே? பத்திரிகையாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட தமிழிசை!

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    சிவகிரி (தென்காசி) 4, பெரியகுளம் (தேனி) 3, ஆயக்குடி (தென்காசி), கயத்தாறு (தூத்துக்குடி), சோத்துப்பாறை (தேனி) , கொடநாடு (நீலகிரி), ஏற்காடு (சேலம்) தலா 2, தென்காசி, மஞ்சளாறு (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் ( விருதுநகர்), கோத்தகிரி (நீலகிரி) தலா 1.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: 28.01.2022 : மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rain Update, Weather News in Tamil

    அடுத்த செய்தி