வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், வடகடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக
25.01.2022, 26.01.2022: தென்தமிழகம், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
27.01.2022 : தென்தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
28.01.2022, 29.01.2022: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
Also read... ஆவினில் மீண்டும் தணிக்கை குழு ஆய்வு - பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குறித்து ஆய்வு!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) 4, கள்ளக்குறிச்சி, சுலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), குடிதாங்கி (கடலூர்) வானமாதேவி (கடலூர்) தலா 3, திருத்தணி (திருவள்ளூர்), தஞ்சாவூர், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சிதம்பரம் (கடலூர்) , அண்ணாமலை நகர் (கடலூர்), விருகாவூர் (கள்ளக்குறிச்சி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்றும் அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.