Home /News /tamil-nadu /

தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 31.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    02.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    03.09.2022 மற்றும் 04.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.+

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    கொடைக்கானல் DRMS (திண்டுக்கல்) 23, கொடைக்கானல் (திண்டுக்கல்). கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 17, அமராவதி அணை (திருப்பூர்), ஆண்டிபட்டி (மதுரை) தலா 10, வாடிப்பட்டி (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 9, ஆண்டிபட்டி (தேனி) , பவானிசாகர் (ஈரோடு), சாத்தான்குளம் (தூத்துக்குடி) தலா 8, கொடநாடு (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 7, ராஜபாளையம் (விருதுநகர்), வைகை அணை (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி) தலா 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மேலும், நிலக்கோட்டை (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), கெட்டி (நீலகிரி) ), அரண்மனைப்புதூர் (தேனி), குன்னூர் PTO (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), தேக்கடி (தேனி), பெரியகுளம் (தேனி), குப்பணம்பட்டி (மதுரை), செய்யூர் ARG (செங்கல்பட்டு) தலா 5, பிலவாக்கல் (விருதுநகர்), மேட்டுப்பட்டி (மதுரை), திருப்பத்தூர் (சிவகங்கை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), துறையூர் (திருச்சி), திருப்பூர் (திருப்பூர்), சத்தியார் (மதுரை), பெரியாறு அணை (விருதுநகர்), கிண்ணக்கொரை (நீலகிரி) தலா 4 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

    Also read... தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவே ஊழல் குற்றச்சாட்டு - ஈபிஎஸ் விளக்கம்!

    நத்தம் (திண்டுக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சோழவந்தான் (மதுரை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), பழனி (திண்டுக்கல்), சத்தியமங்கலம் (ஈரோடு), மானாமதுரை (சிவகங்கை), வத்திராயிருப்பு (விருதுநகர்), பாபநாசம் (தஞ்சாவூர்), உத்தமபாளையம் (தேனி), கமுதி (ராமநாதபுரம்), குந்தா பாலம் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 3, ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), சாத்தூர் (விருதுநகர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), உதகமண்டலம் (நீலகிரி), சின்னகளார் (கோயம்புத்தூர்), புலிப்பட்டி (மதுரை), எண்ணூர் AWS (திருவள்ளூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), சிற்றாறு (கன்னியாகுமரி), மேல் பவானி (நீலகிரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), சிவகாசி (விருதுநகர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Meteorology department, Rain updates

    அடுத்த செய்தி