முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் நாளை 19-ம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கி 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் நாளை 19-ம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கி 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததாவது தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று தெரிவித்துள்ளது.

இது நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see...

First published:

Tags: North East Monsoon, Rain