வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோப்பு படம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. நேற்று மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில்  இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : அக்டோபர் 11 முதல் அக்டோபர் 15 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 11 முதல்அக்டோபர் 14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.Also read... முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை கைவிடவேண்டும் - கு.ராமகிருஷ்ணன்

அக்டோபர் 11 மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே 65 கிலோ மீட்டர்  வேகத்திலும் வீசக்கூடும் தென் மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர்  வேகத்திலும் வீசக்கூடும்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:  தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 12.10.2020 இரவு 11:30  மணி வரை  கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.7 மீட்டர்வரையிலும் , வட தமிழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.3 எழும்பக்கூடும்.
Published by:Vinothini Aandisamy
First published: