Home /News /tamil-nadu /

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

கோப்பு படம்

கோப்பு படம்

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம் திருப்பூர் மதுரை திண்டுக்கல் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் அரியலூர் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி கோவை தேனி மாவட்டங்களில் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழையும், சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு திண்டுக்கல் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Also read... கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - விக்ரமராஜா

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.



கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 36 செ.மீ மழையும், அவலாஞ்சி மற்றும் கூடலூர் பஜாரில் 35 செ.மீ மழையும், மேல் கூடலூர் பிறையார் எஸ்டேட் பகுதிகளில் 33 செ.மீ மழையும், சேரு முல்லை பகுதியில் 32 செ.மீ மழையும் , கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 36 செ.மீ மழையும், சின்கோனாவில் 29 செ.மீ மழையும், சோலையார் இல் 24 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அடுத்த நான்கு நாட்களுக்கு குமரி கடல் பகுதிகள், வடகிழக்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா குஜராத் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில், கேரளா கர்நாடகா கடலோரப் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் ‌

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உயர் கடல் அலைகள் 3.5 மீ இருந்து 4.2 மீ உயரம் வரை எழும்பகூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Weather Forecast

அடுத்த செய்தி