Home /News /tamil-nadu /

நாளை முதல் படிப்படியாக மழை குறையும் - வானிலை மையம்

நாளை முதல் படிப்படியாக மழை குறையும் - வானிலை மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

நாளை முதல் அடுத்த 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
குமரி கடல் முதல் தமிழகத்தின் உள் பகுதி வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேசமயம், குமரி கடல் முதல் தமிழகத்தின் உள் பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் அவர் கூறினார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், நாளை முதல் அடுத்த 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் படிப்படியாக மழையின் அளவு குறையும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.  கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rain, Weather Forecast

அடுத்த செய்தி