தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 13, 2019, 7:31 AM IST
  • Share this:
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னையில் இரவில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. பகலில் கோடை வெயில் தகித்த நிலையில் இரவில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வயலோகம், குடுமியான்மலை, பெரு மாநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் வெயிலால் கருகிய பயிர்களை காப்பாற்றிவிடலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை அரை மணி நேரத்திற்கும் மேல் பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.அதுமட்டுமல்லாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Also see...

First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading