Home /News /tamil-nadu /

நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

மழை

TN Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • News18
  • Last Updated :
    நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, 19-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Also read... அரசு பணி கோரும் மினி கிளினிக் மருத்துவர்கள்..

    மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி