HOME»NEWS»TAMIL-NADU»chennai met deaprtment said there is a possibility of heavy rain in various parts of tn in the next 24 hours vin

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்..
கோப்பு படம்
  • News18
  • Last Updated :
  • Share this:

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

நாளை நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.



மேலும், நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.01.2021 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.01.2021 அன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

Also read... தமிழகத்தில் 31 வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாாரி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ததில் பதிவான மழையின் அளவு, நுங்கம்பாக்கம், மதுராந்தகம், ஹிந்துஸ்தான் பல்கலைகழகம் தலா 6 செ.மீ மழையும், தரமணி, கேளம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம்,
தின்டிவணம், சென்னை விமான நிலையம் தலா 5 செ.மீ மழையும், தாம்பரம் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக புவியரசன் தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: