சென்னையில் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை... கள்ளக்காதலா? ஆணவக் கொலையா?

  • News18
  • Last Updated: November 6, 2019, 11:57 AM IST
  • Share this:
சென்னையில் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு பகுதியை சேர்ந்தவர் 28 வயதான முரளி. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணிக்கு சென்ற முரளி நண்பகலில், அலுவலகத்தின் வெளியில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முரளியின் கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதை பார்த்து கடையில் இருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர், அங்கிருந்வர்கள் ஓடி வருவதற்குள், அந்த நபர் இருசக்கர வாகனத்தில் ஏறித் தப்பித்து ஓடி விட்டார்


ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து சரிந்த முரளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த கண்ணகிநகர் போலீசார் முரளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு முரளி, வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்துள்ளார், அதனால் இந்தக் கொலை cயாக இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் விசாரணை நடந்தது. ஆனால், பெண் குடும்பத்தினர் தரப்பில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்ததால், போலீசார் அடுத்த கட்ட விசாரணையைத் தொடங்கினர். அதில் சில தகவல்கள் தெரியவந்தன.

திருமணத்திற்கு முன்பு முரளி ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். சில மாதங்களில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்தப் பெண் முரளியை விட்டுப் பிரிந்தார். பின் வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சில மாதங்கள் கழித்து முன்னாள் காதலியோடு முரளிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. காதலியின் கணவர் கண்டித்த பிறகும், முரளியின் திருமணத்திற்கு பிறகும் அவர்களின் தொடர்பு தொடர்ந்துள்ளதுஇந்த நிலையில் தான் முரளியை செவ்வாய்க்கிழமை நண்பகலில் முன்னாள் காதலியின் கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். தலைமறைவான முன்னாள் காதலியின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணமாகி இரண்டரை மாதங்களில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Also watch

First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading