சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : விடையற்று நிற்கும் விடுதிகள்!

தண்ணீர் பஞ்சத்தால் கடந்த 4 மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன விடுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: May 27, 2019, 2:12 PM IST
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : விடையற்று நிற்கும் விடுதிகள்!
ஹாஸ்டல்
Web Desk | news18
Updated: May 27, 2019, 2:12 PM IST
தலைநகரில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் மூடப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் அவலம் உலகம் அறிந்ததே.

பருவமழை ஏமாற்றம் ஒரு புறம், நீர்நிலைகள் வறட்சி மறுபுறம் என மாறி மாறி சென்னை மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கின்றனர்.


தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்


சாமானிய மக்கள் தொடங்கி பல்துறை நிறுவனங்கள் வரை இந்த தண்ணீர் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.
இது தற்போது சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளுக்கும் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது.

Loading...

பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் நடுத்தர மக்கள் அனைவரும்  தங்கள் இருப்பிட தேவைக்கு இந்த விடுதிகளை நம்பியே இருகின்றனர். இந்த சூழலில், இந்த தண்ணீர் பஞ்சத்தால் விடுதிகளை மூடும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக விடுதி உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.

பெண்கள் விடுதி


ஒரு நாளைய நீர் தேவை 25,000 லிட்டர்:

இதுகுறித்து, விஜயா மகளிர் விடுதி உரிமையாளர் லதா மணி கூறுகையில், நிலத்தடி நீரை மட்டும் நம்பியே நாங்கள் இருக்கிறோம். 24 மணி நேரமும் மோட்டார் ஓடிக்கொண்டே இருக்கும். 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மெட்ரோ வாட்டர் கிடைக்கும். தற்பொழுது அந்த நீரும் சரியாக வருவதில்லை. 30 நபர் தங்கியிருக்கும் இந்த விடுதிக்கு ஒரு நாளைய நீர் தேவை என்பது 25,000 லிட்டராக இருக்கிறது என்றார்.

லதா மணி


குடிப்பதற்கு மினரல் வட்டர்தான்:

ஹாஸ்டலில் குடிப்பதற்கு முழுமையாகவே மினரல் வாட்டரை தான் பயன்படுத்துகிறோம். 2 நாளைக்கு ஒருமுறை 20 கேன்கள் வாங்குகிறோம். ஒரு மாதத்திற்கு சராசரியாக 25,000 முதல் 30,000 வரை குடித்தண்ணீருக்கு செலவழிக்கிறோம் என்று ஹாஸ்டலி உரிமையாளர் கூறுகிறார்.

மினரல் வாட்டர்


தண்ணீர் பஞ்சாத்தால் ஒரு ஹாஸ்டலை காலி செய்துவிட்டோம்:

250 அடி ஆழ போரில் முன்பு இருந்த அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் பஞ்சத்தால் ஈக்காட்டுத்தாங்கலில் வைத்திருந்த ஹாஸ்டல் ஒன்றை காலி செய்துவிட்டு வந்தோம். இது சொந்த ஹாஸ்டல் என்பதால் ஓரளவு சமாளித்து கொண்டு இருக்கிறோம் என்றும் லதாமணி கூறுகிறார்.

மகளிர் விடுதி உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், நாங்கள் 4 ஹாஸ்டல் வைத்திருந்தோம். தற்போது 2 ஹாஸ்டல்களை மூடிவிட்டோம். புதிதாக தங்க வருவோரிடமும் தண்ணீர் பஞ்சம் பற்றி தெளிவாக எடுத்து சொல்லிதான் விடுதி கொடுக்கிறோம் என்றார்.

மேலும் ரூம்களுக்கு நேரடியாக தண்ணீர் கொடுக்க முடியவில்லை. ஒரு குழாயில் வரும் தண்ணீரைதான் வாளிகளில் பிடித்துக் கொண்டு போய் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 400 அடி வரை போர் பொட்டும் நிலத்தடி நீர் சரியாக கிடைப்பதில்லை.

லாரிகளில் வழங்கப்படும் தண்ணீர்


தண்ணீர் பிரச்னையால் பலர் விடுதிகளை காலி செய்துவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். தண்ணீருக்காக ஒரு நாளைக்கு 4000 ரூபாய் வரை செலவு செய்கிறோம். 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லாரி தண்ணீர் 3500 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது.

இதே நிலை தொடர்ந்தால் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் மக்களின் வாழ்க்கை கேவிக்குறியாகி விடுமோ என்கிற அச்சம் தலைதூக்க துவங்கியுள்ளது.

Also see... கோடை காலம் வந்துருச்சு... கர்ப்பிணிகளே உஷார்

Also see...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...