நடக்காமல்போன திருமணத்துக்கு வசூல்? ஜி.எஸ்.டி. வரிகேட்கும் வடபழனி கோவில் நிர்வாகத்தின் திருமண மண்டபம்..

கொரோனாவால் மண்டபத்தில் திருமணம் நடக்காத நிலையில், வாடகை பணத்தை திருப்பித் தர வடபழனி முருகன் கோவில் நிர்வாகம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. நடக்காத திருமணத்திற்கு 22,000 ரூபாய் ஜிஎஸ்டி பிடித்தம் செய்வதாகவும் மண்டபத்தை பதிவு செய்தவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நடக்காமல்போன திருமணத்துக்கு வசூல்? ஜி.எஸ்.டி. வரிகேட்கும் வடபழனி கோவில் நிர்வாகத்தின் திருமண மண்டபம்..
வடபழனி கோவில் திருமண மணடபம்
  • Share this:
தமிழகத்தில் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று சென்னை, வடபழனியில் உள்ள முருகன் கோவில். இந்த கோவில் வளாகத்திலும், கோவிலுக்கு சொந்தமான வள்ளி திருமண மண்டபத்திலும் ஆண்டுக்கு 70,000-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. வள்ளி திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய ஒரு வருடத்திற்கு முன்பே முன் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

சென்னையைச் சேர்ந்த கணேஷ் என்பவர், கடந்த மே மாதம் நடக்கவிருந்த தன் மகனின் திருமணத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே  1, 40,000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்தார். ஆனால் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவித்ததன் காரணமாக திருமண மண்டபங்கள் மூடப்பட்டது. இதனால் மண்டபத்தில் திருமண நிகழ்வு நடத்த முடியாமல் போனது.

முன்பணமாக செலுத்திய பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்தும் கோவில் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை ஒரு ரூபாய் வரை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர் மண்டபத்தை பதிவு செய்தவர்கள்.


முன் பணமாக கட்டிய 1,40,000 ரூபாயில் ஜிஎஸ்டி தொகை 22,000  ரூபாய் போக மீதி தொகையைதான் தரமுடியும் என்று கோவில் நிர்வாகம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணமே நடைபெறாத ஒரு மண்டபத்திற்கு ஏன் ஜிஎஸ்டி தொகை கட்ட வேண்டும் என புகார் தாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணம் கொடுக்காதது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, கொரோனா தொற்று காரணமாக கோயில் திறக்கப்படாமல் இருந்ததால், உண்டியல் வருமானம் இல்லை என்றும் அதனால் தொகையை திரும்ப கொடுக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. திருமணமாகி 31 நாட்களில் விமானப் பணிப்பெண் தற்கொலை.. என்ன நடந்தது?கொரோனா காரணமாக பலரின் திருமணம் எளிமையாக நடந்தபோதும், சிலரது திருமணம் தடைபடும் சம்பவங்களும் நடந்துள்ளன. மனதால் நொந்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்காமல் காரணம் சொல்வது எந்த வகையில் நியாயம் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுள்ளனர்.


தடைபெற்ற திருமணம் மீண்டும் நடைபெற முன்பணமாக கட்டிய தொகை கிடைத்தால் உதவும் என்றும் மணமக்கள் வீட்டார் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்பணமாக கட்டிய தொகையை விரைந்து கொடுக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading