சென்னையில் மாஞ்சா நூலால் இரவில் காவலர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்... இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

சென்னை வில்லிவாக்கத்தில் தொடர்ந்து மாஞ்சா நூல் பயன்பாடு அதிகரித்து வருவதால் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மாஞ்சா நூலால் இரவில் காவலர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்... இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
மாஞ்சா நூல் (கோப்புப்படம்)
  • Share this:
பட்டம் பறக்க விட பயன்படும் மாஞ்சா நூல், வாகன ஓட்டிகள் கழுத்தில் சிக்கி உயிரிழப்புகளும், விபத்தும் நடந்துள்ளன. இதனால் சென்னையில் மாஞ்சா பயன்பாட்டிற்குத் தடை விதித்ததோடு அதை விற்றாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ சட்ட விரோதம் என நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இச்சூழலில், சென்னை வில்லிவாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில் இளைஞர்கள் மாஞ்சா நூல் அதிகமாகப் பயன்படுத்தி பட்டம் விடுவதாக புகார் எழுந்தது. ஏற்கனவே பல முறை சமூக ஆர்வலர்கள் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

Also read: புதுவையில் சூறைக்காற்றுக்கு 50 ஏக்கர் வாழை மரங்கள் நாசம்


சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஜெய்குமார் (42) சென்னை வேப்பரி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி மகேஷ்வரி (38) மத்திய குற்றப்பிரிவில் பெண் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இருவரும் நேற்றிரவு 10 மணி அளவில் கொரட்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பு வருவதற்கு பாடி மேம்பாலத்தின் மீது வந்துள்ளனர்.

அப்போது தீடீரென்று மாஞ்சா நூல் காவலர் ஜெயகுமார் கழுத்தில் மாட்டி அறுத்ததால் நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பெண் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த பொது மக்கள் ஓடி வந்து உதவி செய்து வில்லிவாக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காவலர்களான கணவன் மனைவி இருவரையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாஞ்சா பயன்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ரஜீஸ் பாபுவை கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading