சென்னை அருகே உறவினர்கள் இடையேயான மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை....

கோப்புப் படம்

சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், வீடு மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

 • Share this:
  சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி போண்டா பாலாஜி என்பவர் தீபாவளியை கொண்டாட அத்திப்பட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு மது அருந்திய போண்டா பாலாஜிக்கும், அவரது உறவினர்களுக்கும் நகையை பங்கு போடும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.சி.எஃப் காலனி அருகே கைகலப்பு ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

  அதன்பிறகு இரு சக்கர வாகனத்தில் தனது மாமனார் வீட்டிற்கு திரும்பிய போண்டா பாலாஜியை, அவரது உறவினர்கள் 6 பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அதோடு விட்டுவிடாமல் அத்திப்பட்டு குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள ரவுடி போண்டா பாலாஜியின் வீட்டையும், வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினர்.

  மேலும் படிக்க... ஆரணியில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு...  இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 2 உதவி ஆணையர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: