ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... அம்மாவுக்கு உருக்கமான கடிதம்...

சென்னையில் காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... அம்மாவுக்கு உருக்கமான கடிதம்...

தற்கொலை செய்து கொண்டவர்

தற்கொலை செய்து கொண்டவர்

சென்னை மதுரவாயல் அருகே காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொண்டதாக இளைஞர் ஒருவர் தன் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை மதுரவாயில் அடுத்த ஆலப்பாக்கத்தில் இயங்கி வரும் பிரைட் ஆட்டோ காம்பனட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இவருடைய சொந்த ஊர் நாகப்பட்டினம். இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மேலே உள்ள அறையில் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு உறங்கச் சென்ற பிரபாகரனை, இன்று காலை அவருடன் பணிபுரியும் தெய்வமணி என்பவர் பணிக்குச் செல்ல எழுப்ப சென்றார். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  பின்னர் இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து வந்து பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரபாகரன் தங்கி இருந்த அறையில் ஓர் கடிதம் சிக்கியது.

  அதில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டதாகவும் அந்தப் பெண்ணை மறக்க முடியாத காரணத்தால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்தார்.

  தற்கொலை செய்துக்கொண்டவர் எழுதிய கடிதம்

  மேலும் என்னுடைய சாவிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் அம்மா எத்தனை ஜென்மம் எடுத்தாலும்  நீயே எனக்கு தாயாக வேண்டும். உங்கள் இருவரையும் கடைசி காலம் வரை இருந்து கவனித்துக்கொள்ள முடியாத பாவி ஆகிவிட்டேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

  மேலும் படிக்க...தடையை மீறி பட்டாசு கடை வைத்தவர் கைது: தந்தையை விடுவிக்குமாறு கதறிய சிறுமி- இனிப்புகள் வழங்கி சமாதானம் செய்த போலீஸ்

  கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Commit suicide, Love failure