’காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்றாங்க’: வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

மன்சூர் இறப்பதற்கு முன், செல்போனின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் " என்ன வாழ்க்கைடா இது., காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டுறாங்க, வாழ்க்கைக்கு குட்பை" என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: May 4, 2019, 8:17 AM IST
’காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்றாங்க’: வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
மன்சூர்
Web Desk | news18
Updated: May 4, 2019, 8:17 AM IST
வடசென்னையில் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் பகுதியில் உள்ள 5-வது தெருவைச் சேர்ந்த மன்சூர், ராயபுரம் மாடல் லைன் பகுதியில், பக்கோடா கடையில் வேலை செய்து வந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மன்சூருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய மன்சூர், பணம் இல்லையெனில் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நண்பர்களிடம் பேசியுள்ளார். பின்னர் தனது படுக்கை அறைக்கு சென்ற மன்சூர், காலையில் வெகுநேரமாக அறையில் இருந்து வெளியே வராததால் அவரின் அக்கா சுல்தானா சந்தேகமடைந்தார்.


நெடுநேரம் கதவைத் தட்டிய குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மன்சூர், தனது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போயினர்.

இது குறித்து விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், மன்சூரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் மன்சூர் இறப்பதற்கு முன், செல்போனின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் " என்ன வாழ்க்கைடா இது., காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டுறாங்க, வாழ்க்கைக்கு குட்பை" என்று பதிவிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Also see...  சபாநாயகருக்கு எதிராக 2 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

Loading...



Also see... வெயிலுக்கு பீர் விற்பனை ஜோர்! உடல் சூட்டை தணிக்குமா பீர்?

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...