இன்ஸ்டா மூலம் பழக்கம்.. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை - காவல்துறை தம்பதிகளின் 17வயது மகளுக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்திய பிரகாஷ் சினிமா துறையில் இயக்குனராக இருந்து, தற்போது சமுதாயம் என்ற திரைப்படத்தினை இயக்கி வருவதாகவும் தெரியவந்தது.

  • Share this:
சென்னையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறையில் பணியாற்றும் தம்பதி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தனர்.அந்த புகாரில் தனது 17 வயது மகள் ஆன்லைன் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது இன்ஸ்டாகிராம்  செயலி மூலம் மதுரவாயலைச் சேர்ந்த சத்யபிரகாஷ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.சினிமா துறையில் இயக்குநராக இருந்து வருவதாகவும், எனது மகளை  சினிமாவில் நடிகையாக நடிக்க வைக்கிறேன் என்று பல்வேறு ஆசை வார்த்தை கூறி  வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புகாரின் வடபழனி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், தன்னை மணக்கும் படி சிறுமியை மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சத்திய பிரகாஷ் சினிமா துறையில் இயக்குனராக இருந்து, தற்போது சமுதாயம் என்ற திரைப்படத்தினை இயக்கி வருவதாகவும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், சீதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது . இவர்களுக்கு ஏழு வயதில் குழந்தை இருப்பதாகவும், தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து போக்சோவில் கைது செய்யப்பட்ட சத்தியபிரகாஷை சிறையில் அடைத்தனர்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: