அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!

அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: September 22, 2019, 9:54 AM IST
  • Share this:
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

அக்டோபர் 24-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே போட்டியில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.


கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை எந்த தேர்தலிலும் போட்டியில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியில் இருந்து விலகியுள்ளது.

திரைப்பட பணிகள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால், தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்வது சிரமம் என்பதால், போட்டியில் இருந்து மநீம விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.



Loading...

ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று கமல்ஹாசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை பெற்று ஆச்சரியப்பட வைத்தது. சில தொகுதிகளில் அக்கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...