கிறிஸ்துவப் பள்ளி வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

வாக்குபதிவு நாளில் கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் பண்டிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்துவப் பள்ளி வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: March 19, 2019, 4:40 PM IST
  • Share this:
பெரிய வியாழன் பண்டிகை காரணமாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றக் கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளிக்கு முந்தைய நாளில் பெரிய வியாழன் பண்டிகை கொண்டாடப்படுவதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுடன் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் போது, தேர்தல் ஆணையம் அப்பள்ளிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதால், வழிபாடு செய்யமுடியாத நிலை ஏற்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற கோரி நீதிமன்றத்தில் வழக்கு

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், வாக்குபதிவு நடைப்பெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைப்பெறுவதால், வாக்குப்பதிவு செய்வதற்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்திற்பதாக தெரிவிக்கப்பட்டது.அதேபோல் வாக்குபதிவு நாளில் கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் பண்டிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக்கேட்ட நீதிபதிகள் நாளை இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, நாளை மறுநாள் வழக்கை தள்ளிவைத்தனர்.

Also see...

First published: March 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading