சென்னை கல்லூரி விடுதியில் ஹெட் கான்ஸ்டபிள் மகன் தூக்கிட்டு தற்கொலை

வம்சி பவன் மின்விசிறியில் நைலான் கயிறுகொண்டு தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கல்லூரி விடுதியில் ஹெட் கான்ஸ்டபிள் மகன் தூக்கிட்டு தற்கொலை
லயோலா கல்லூரி
  • Share this:
சென்னையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த ஹெட் கான்ஸ்டபிள் மகன் வம்சி பவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், சீதாம்மதுரா பகுதியைச் சேர்ந்தவர் வம்சி பவன் (22). இவரது தந்தை கமலகர் ரெட்டி ஆந்திர போலீசில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வம்சி பவன் லயோலா கல்லூரியில் வளாகத்திலுள்ள லிபா ஜென்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கி  எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று 8 மணி அளவில் வம்சி பவனின் நண்பர்கள் இவரது அறை கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற நண்பர்கள் வம்சி பவன் மின்விசிறியில் நைலான் கயிறுகொண்டு தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதனால் கீழ்ப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வம்சி பவனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனால் வம்சி பவனின் நண்பர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் வம்சி பவன் மரணத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்