சென்னை மாதவரம் தனியார் பார்க்கிங் யார்டில் தகராறு ஆத்திரமடைந்த வடமாநில லாரி ஓட்டுனர் லாரியால் மூன்று பேர் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு. மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியார் லாரி பார்க்கிங் இடம் உள்ளது. இந்த இடத்தில் வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன் (வயது 36) அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (வயது 36) வடகரை பகுதியைச் சேர்ந்த குமரன் (வயது 34) மற்றும் பலர் லாரி பார்க்கிங் இடத்தில் நேற்று இரவு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர்களிடம் தகராறு ஏற்பட்டது.
இதில் வடமாநில டிரைவர் ஒருவர் லாரியை பின்னோக்கி எடுத்தபோது லாரி பின்னாலிருந்து மேற்கண்ட மூவரும் மீதும் மோதியதில் கமலக்கண்ணன் பலியானார் குமரன் மற்றும் நவீன் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் குமரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைக்கப்பட்டனர்.
Also Read : வளையல் பெட்டியில் போதைப் பொருள்.. ஆஸ்திரேலியாவுக்கு கூரியரில் கடத்தல்.. பகீர் கும்பலின் பின்னணி என்ன?
படுகாயமடைந்த இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் கிரிஷ் குமார் கண்ணையா, லால் சிங் என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் லாரி யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வடமாநிலத்தவர்கள் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்: பார்த்தசாரதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Police, Crime News, Death, Murder