Unlock: சென்னையில் புதிய தளர்வுகள் அறிவிப்பு

சென்னையில் முழு ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Unlock: சென்னையில் புதிய தளர்வுகள் அறிவிப்பு
கோப்புப்படம்
  • Share this:
முழு ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா தொற்றின்  நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்  கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்க
ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.


இருந்தபோதிலும் பெருநகர சென்னை காவல்  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு 5.7.2020 வரை அமலில்  இருக்க உத்தரவிட்டிருந்தேன்.  தற்போது, அதாவது 6.7.2020 முதல் மறு  உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்இயங்கும் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும்சேவைகளுக்கு இரவு 9.00 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள்பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.  காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.


வணிக வளாகங்கள் (மால்ஸ்) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படலாம்.

மற்ற செயல்பாடுகளைப் பொருத்தவரை, 19.6.2020க்கு முன்னர் பெருநகர  சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட  ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading