முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

மாதிரி படம்

மாதிரி படம்

வானிலை சூழலுக்கு ஏற்ப புறநகர் ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நிலையில் தரைக்காற்று வேகம் அதிகரிக்க கூடும் மற்றும் கனமழை பெய்யக்கூடும என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரயில் டிராக்கர்கள், பொறியியல் மற்றும் மின்சார மற்றும் சிக்னல் / டெலிகாம் பராமரிப்பு சேவை முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு மார்க்கம் , சென்னை கடற்கரை முதல் திருமால்பூர் மார்க்கம் , சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி மார்க்கம் , சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்க்கம் என பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

மேலும் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் அல்லது ரயில் இயக்குவதில் ஏதேனும் கோளாறு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உடனடியாக 044-25330714 / 044-25330952 என்ற கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன் தொடர்ந்து பாதிப்பை சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்.. ரெட் அலெர்ட்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

தற்போதைய நிலையில் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , ரயில்களின் இயக்கம் தொடர்பாக சிக்னல் கோளாறு உள்ளிட்ட ஏதேனும் பழுது தென்படும் பட்சத்தில் ரயில்களை நிறுத்தவும் அல்லது மாற்று நேரத்தில் இயக்குவது குறித்தும் பரிசளிக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai local Train, Cyclone Mandous, Southern railway