சென்னை மற்றும் புறநகர் ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது முடிக்கப்படும் என்றும் நியூஸ் 18 செய்தி எதிரொலியாக தெற்கு ரயில்வேவின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் 2016ம் ஆண்டு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அதிகம் கவனிக்கப்பட்டது ரயில் நிலையம் என்பதுவே. பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்பதும், முக்கிய ரயில்நிலையத்தில் சிசிடிவி இல்லை என்பதும் பெரும் பேசுபொருளானது.
அதன்பின்னர் இந்த சிசிடிவி பிரச்னை நீதிமன்றம் படியும் ஏறியது. இது ஒருபுறமிருக்க அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கள ஆய்வு மேற்கொண்டு செய்தி ஒளிபரப்பியது.
இதையடுத்து நமது செய்தியை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ள சென்னை கோட்ட மேலாளர், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சிசிடிவிக்கள் பொருத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV, News18 Tamil Nadu, Southern railway