• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • திருமணம் செய்து கொள்வதாக கூறி லிவ்விங்டுகெதர்: திடீரென வேறு பெண்ணுடன் திருமணம் - சாப்ட்வேர் இன்ஜினியர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி லிவ்விங்டுகெதர்: திடீரென வேறு பெண்ணுடன் திருமணம் - சாப்ட்வேர் இன்ஜினியர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

Youtube Video

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி லிவ்விங் டு கெதராக வாழ்ந்த காதலன் திடீரென வெறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக, அவர்மீது மனைவி போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

 • Share this:
  மும்பையை சேர்ந்தவர் 28 வயதான பூஜா, 2016ம் ஆண்டு சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்தார். அப்போது அவருக்கு தோழியின் நண்பரும் சாப்ட்வேர் இன்ஜினியருமான 33 வயதான தினேஷின் அறிமுகம் கிடைத்தது. நட்பாக பழகியவர்கள், தனியே சென்னையின் பல இடங்களுக்கும் சென்று வந்தனர். 2018ஆம் ஆண்டு படிப்பு முடிந்து பூஜா மும்பைக்குப் புறப்பட்ட போது, தான் அவரைக் காதலிப்பதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார் தினேஷ்.

  காதலை ஏற்க மறுத்த பூஜா, தனது பெற்றோரிடம் திருமணத்திற்குப் பேசும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் தன் காதலை ஏற்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வதாக தினேஷ் போன் மூலம் மிரட்டியுள்ளார். மேலும் இரு வீட்டார் சம்மதத்துடன் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

  2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானம் மூலம் பூஜாவை சென்னைக்கு வரவழைத்தார் தினேஷ். கிழக்குகடற்கரை சாலையில் தனி வீடு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதில் ஒருமுறை பூஜா கருவுற்றதாகவும் இருவரும் சேர்ந்து அதைக் கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்த நிலையில், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், தனது தந்தை உயிரிழந்ததாகக கூறி தினேஷ் திருச்சி சென்று விட்டார். அதன்பின் வாரம் ஒருமுறை மட்டும் பூஜாவைத் தொடர்பு கொண்டு பேசிய தினேஷ், பின்னர் பேசுவதையே நிறுத்தி விட்டார். இதற்கிடையே, தினேஷ் உறவினரின் முகநூல் பக்கத்தில், தினேஷ் வேறொரு பெண்ணுடன் திருமணக் கோலத்தில் இருந்த புகைப்படத்தை பூஜா பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மேலும் விசாரித்த போது, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தினேஷுக்கு திருமணம் ஆனது தெரியவந்தது.

  மேலும் படிக்க... சவுகார்பேட்டை கொலைச் சம்பவம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜுவ் துபே கைது..  மேலும், வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே, தினேஷ் தன்னை சென்னை வரவழைத்து ஒன்றாக வாழ்ந்ததும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூஜா தேசிய பெண்கள் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார். பின்னர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தொடர்ந்து அடையாறு துணை ஆணையரிடமும் நேரில் புகார் அளித்தார்.  ஆனால் தினேஷ் மீது புகாரளித்தும் இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பூஜா குற்றம்சாட்டியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: