கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்க புதிய உத்தி: குழந்தையை பாதிக்காத வகையில் லெட் கவசம்..

லெட் அதாவது ஈயத்தின் அடர்த்தி அதிகம் என்பதால் கருவிகளிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. அதனாலான கவசத்தை உடலின் பாகங்களை மறைக்கும் வகையில் அணிந்து கொண்டால் அந்த பாகங்களில் பாதிப்பு ஏற்படாது.

கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்க புதிய உத்தி: குழந்தையை பாதிக்காத வகையில் லெட் கவசம்..
கர்ப்பிணிகளுக்கான லெட் கவசம்
  • Share this:
கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக எக்ஸ் ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தைக்கு கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படலாம் என்பதுவே காரணமாகும். சாலை விபத்து அல்லது அது போன்ற தவிர்க்க இயலாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படும். ஆனால் தற்போது கொரோனா காலத்தில் நெஞ்சக எக்ஸ் ரே மற்றும் சிடி ஸ்கேன் பலருக்கு அவசியமாகிறது.

கொரோனா பாதித்த பல கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு பாதுகாப்பாக குழந்தை பெற்றுடுக்கிறார்கள். அவர்களுக்கு உரிய கொரோனா சிகிச்சை வ்ழங்க கொரோனா பாதிப்பின் தீவிரத்தை எக்ஸ் ரே மட்டும் சிடி ஸ்கேன் உதவியுடனே தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவில் பாதித்த பலர் அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் என்பதால் சிடி ஸ்கேன் மிக அவசியமாகிறது. சில நேரங்களில் பி சி ஆர் பரிசோதனை நெகடிவ் என வந்தாலும் தொடர் சளி, இருமல் இருப்பதால் சிடி ஸ்கேன் மூலமே நெஞ்சக பகுதியில் ஏற்பட்டுக்கும் பாதிப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.


எனவே எக்ஸ் ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தையின் நலன் பாதிக்காத வகையில் 'லெட் ஷீல்ட்'  வழங்கப்படுகிறது. குழந்தை இருக்கும் வயிற்று பகுதியில் இந்த கவசம் போன்றதை அணிந்து கொண்டு பிறகு சிடி ஸ்கேன் எடுத்தால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

லெட் அதாவது ஈயத்தின் அடர்த்தி அதிகம் என்பதால் கருவிகளிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. அதனாலான கவசத்தை உடலின் பாகங்களை மறைக்கும் வகையில் அணிந்து கொண்டால் அந்த பாகங்களில் பாதிப்பு ஏற்படாது.

மேலும் படிக்கUnlock4 | மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி... மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?இது குறித்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா கர்பிணி பெண்கள் சிடி ஸ்கேன் எடுக்கும் போது அச்சப்பட தேவை இல்லை என்கிறார்.  " அறிகுறிகள் இல்லாத போதும் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அறிகுறிகள் இருந்தும் பிசி ஆர் பரிசோதனையில் நெகடிவ் வரலாம். எனவே சி டி ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே செய்து கொள்ளும் போது பாதிப்பை முழுமையாக உணர முடியும். லெட் ஷீல்ட் அணிந்து கொண்டு ஸ்கேன் செய்யும் போது எந்தவித பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாது" என்கிறார்.
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர், இயக்குநர் விஜயா.
First published: August 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading